Monday, September 2, 2013

நீதியின் அறப்போராட்டம்!


அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் , மூன்று
கடலூர் கோட்டம்.
தோ.T.ராதாகிருஷ்ணன்         தோ.P.ரவி         தோ.R.ஜெயக்குமார்
தே.தலைவர்                      தே.செயலாளர்         தே. பொருளாளர்
அலைபேசி:-9976226561 அலைபேசி:-9842499049    அலைபேசி:-9943661838

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!                                                                                                        தேதி:- 05.09.2013 
                 வணக்கம்!இந்த சுற்றறிக்கையின் வாயிலாக நமது உறுப்பினர்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த ஆண்டு 26-08-2012 அன்று கடலூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நமது கடலூர் கோட்ட சங்கத்தின் 41-வது கோட்ட மாநாட்டில் நம் தோழர்கள் மூன்று அணியாய் பிரிந்து போட்டியிட்டதும்,மிகவும் வெளிப்படையாகவும்,கட்டுகோப்பாகவும் நடைபெற்ற தேர்தலில் தலைவராக தோ.T.ராதாகிருஷ்ணன் அவர்களும்,செயலாளராக தோ.P.ரவி அவர்களும்,பொருளாளராக தோ.R.ஜெயக்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கபட்டதும் தாங்கள் அறிந்ததே!.
           நமது அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்று,கடலூர் கோட்டம்,சில சுயநல பதவிவெறி பிடித்த சக்திகளால் முடக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில்,சில நிகழ்வுகளையும்,சில நினைவுகளையும் தோழர்களுக்கு நினைவுறுத்தவே இந்த சுற்றறிக்கை

 சங்கமா? திட்டமிட்ட சதியா ?
           கடந்த ஆண்டு 26-08-2012 அன்று நடந்த தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு சொற்ப வாக்குகளை பெற்று தோல்வியடைந்த நமது மரியாதைக்குரிய தோ.P.மனோகரன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, வெளியில் இருந்து யாரோ ஒருவர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு பொய்யான போட்டி பட்டியலை OFFICIALobserver அவர்களிடம் அளித்தார்கள். அதன் தொடர்ச்சியாக அப்போதைய  கடலூர் கண்காணிப்பாளரிடம் தன்னை செயலாளராக அங்கீகரிக்கமாறு கடிதம் கொடுத்தார்.
             மேலும் கடலூர் நீதிமன்றத்தில் சனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கபட்ட தோழர்களின் செயல்பாட்டை முடக்கும் வகையில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இன்றளவும் அந்த  வழக்கு நிலுவையில் உள்ளது. நீதியை நிலைநாட்ட தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்.
              மேலும், தோ.மனோகரன் அவர்கள் கடலூர் கண்காணிப்பாளரிடம், கடலூர் AIPEUP3(NFPE ) க்கு அங்கீகாரம் இல்லையென்றும்,எனவே நாம் கடலூர் கோட்ட சங்கம் சார்பாக அறிக்கை வெளியிடகூடாதென்றும், நம்முடைய வலைதளத்தையும் நாம் தகவலுக்காக பயன்படுத்தகூடாதென்ற தடையுத்தரவையும் பெற்றுள்ளார்.            
இதன் நடுவே! அமைப்புரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில்,தொடர்ச்சியாக நம் தோழர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால்,நம் மரியாதைக்குரிய மாநில செயலாளர் தோ.J.ராமமூர்த்தி அவர்கள் சனநாயகமாக தேர்ந்தெடுக்கபட்ட நிர்வாகிகளை அங்கீகரிப்பதாக உறுதியளித்தார்.அதன் அடிப்படையில் கடந்த 28-1-13,& 29-1-13 அன்று சென்னையில் நடைபெற்ற நம் மாநில சங்கத்தின் செயற்குழுவில் நம் தோழர்கள் தோ.P.ரவி,தோ.பெ.தாமோதரன்,மற்றும் தோ.R.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். சரியாக 28-1-13 அன்று இரவு 8 மணியளவில் கடலூர் கோட்ட அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்றை அங்கீகரிக்க கூடாதென சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தடையுத்திரவு வந்திருப்பதாக தோ.J.ராமமூர்த்தி அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.இம்முறை வழக்கு தொடர்ந்திருப்பவர்  நம் மரியாதைக்குரிய தோ.பாலக்கிருஷ்ணன் அவர்கள்.          
இவ்வளவு தாக்குதல் நம்மீது நிகிழ்த்தப்பட்டாலும்,தோழர்களாகிய உங்கள்  மீதும்,சனநாயகத்தின் மீதும்,நம்பிக்கை வைத்தும் தொடர்ந்து  அங்கீகாரம் பெற தொடர்ச்சியாக போராடி வருகிறோம், என்பதை தோழர் தோழியர்களுக்கு தெரிவித்துகொள்கிறோம்.

தோழர்கள் ஆற்றிய தொழிற்சங்கபணிகள்:-
                 இத்தகைய நெருக்கடியான சுழலலிலும்,நம்முடைய அகில இந்தியச்சங்கம்,மாநிலச்சங்கம் அழைப்பு விடுத்த ஏழாவது ஊதியகுழுவை அமைக்க வலியுறுத்தி  நடந்த 12-12-12 வேலைநிறுத்தத்தில் கடலூர் கோட்ட சங்கத்தின் சார்பாக ஏராளமான தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
              இன்று மாநிலம் முழுவதும் எழுந்துள்ள பதவிக்குறைப்பு,ஆட்குறைப்பு பிரச்சனைக்கு அன்றே கடந்த டிசம்பர் மாதம்  சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஒரு மாபெரும் ஆர்பாட்டத்தை நாம் நடத்தினோம்.அதோடு கடந்த பிப்ரவரி மாதம் DA MERGER க்காக நாடு முழுவதும் ஆழைப்பு விடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் மீண்டும் ஒரு மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தினோம்.  
            10-3-13 முதல் 12-03-13 வரை கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நம் அகில இந்தியச்சங்கத்தின் மாநாட்டில் கடலூர் கோட்டத்திலிருந்து அதிகளவிலான  நம் தோழர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு நம் அகில இந்திய பொது செயலாளர் தோ.M.கிருஷ்ணன் அவர்களின் பாராட்டை பெற்று திருப்பினர்.             
5-03-13 முதல் 07-03-13  வரை  கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாட்டில் நம் தோழர்கள் மூன்று நாட்களும் முழுமையாக கலந்து கொண்டு தொழிச்சங்க பணியை செவ்வனெ ஆற்றினர். நம் சங்கத்திற்கு அங்கீகாரம் இல்லாத சுழலிலும், நம் தோழர்களின் செயல்பாட்டின் விளைவாக உறுப்பினர் சேர்க்கையின் போது, பதிமூன்று தோழர்கள்(மாற்று சங்கத்திலிருந்தும் ) புதியதாக இணைந்துள்ளனர். 

சனநாயக படுகொலையின் காரியதரிசிகளே!
1.கோட்ட மட்டத்தில் ஊழியர்களின் எண்ணற்ற பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது, திட்டமிட்டு சிலரின் தவறான வழிகாட்டுதலால் தொடர்ச்சியாக தொழிற்சங்கத்தை முடக்கி நீங்கள் அடைந்த மகிழ்ச்சி தான் என்ன?
2. வழக்கு மேல் வழக்கு தொடர்ந்திருக்கும் நீங்கள், அதற்கு உறுதுணையாக இருக்கும் சில தோழர்கள்,இதில் எந்த விதமான தொழிற்சங்க பணிகளையும்,போரட்டங்களை நடத்தாது மற்றும் பங்கேற்காது ஏன்?
3. நாங்கள் என்ன அமெரிக்காவில் இருந்து படையெடுத்து வந்தவர்களா?அல்ல! நாங்களும் இந்த கோட்டத்தின் தோழர்களே என்று உணர மறுப்பது ஏன்?
மாநில சங்கத்தின் கவனத்திற்கு:-
             1.மாநில செயலாளர் முன்னின்று தேர்தல் நடத்திய ஒரு கோட்டதிற்கே இந்த நிலை என்றால்? இது மாநில செயலாளரின் பெருமைக்கு இழுக்கு இல்லையா?
             2. இந்த சிக்கல் தீர அமைப்புரீதியான எந்த தீர்வையும் தராமல்,தீர்வுக்கான எந்த முயற்சியும் எடுக்காமல்,குறைந்தபட்சம் சனநாயகத்தை திட்டமிட்டு படுகொலை செய்த தோழர்களுக்கு ஒரு கண்டனத்தை கூடத் தெரிவிக்காதது ஏன்?
             3. அண்டை கோட்டமான விருத்தாசலத்தில் இதே போல் சிக்கல் எழுந்த போது,உடனே அங்கீகாரம் வழங்க CPMG அவர்களுக்கு கடிதம் எழுதும் மாநில செயலாளர்,ஓராண்டு கடந்தும் இன்று வரை அது போல் கடிதம் எழுதாதது ஏன்? கடலூர் கோட்டம் மட்டும் தொடர்ந்து மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவது ஏன்?
அறமே கூற்றாகும்:-
                அரசியலில் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்!
                                                                                                -சிலப்பதிகாரம்
                என் எதிரிகளின்  ஆயுதத்தை விட என் தோழர்களின் மவுனமே 
அதிகம்  அச்சத்தை தருகிறது.
                                     -மார்டின் லூதர் கிங்.
ஓராண்டை  கடந்தாலும்  நீதியை நிலைநாட்ட தொய்வில்லாமல் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். இந்த அறப்போராட்டத்தில் சனநாயக விரோத சக்திகளுக்கு எதிராக தோழர்களின்  பங்களிப்பும்  அவசியம். தொழிற்சங்கப் போராளி தோ.K.G.BOSE , தொழிற்சங்கமேதை தோ.NCA  அவர்களின் பாதையில் வழிநடப்போம்.

ஒன்றுபடுவோம்!   போராடுவோம்!  வெற்றி நமதே!

                                                                                                                                                         
                தோ.P.ரவி,
தேர்ந்தெடுக்கபட்ட செயலாளர்,
AIPEUP3(NFPE ),
@அண்ணாமலைநகர் -608002.