Friday, February 26, 2016

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் GDS (NFPE) தமிழ் மாநிலம்

அன்பார்ந்த தோழர்களே!   தோழியர்களே !   வணக்கம் 

GDS ஊழியர்களின் வாழ்வாதாரம்  காக்கப்படவும் ஊதியகுழு  கோரிக்கை மனு தயாரித்திடவும் சட்டங்கள் அறிந்திடும் கருத்தரங்க மாநாடு.

நாள் : 28.02.2016 ஞாயிறு  காலை 9.00 மணி முதல்-- இடம்  SRMU சங்க கட்டிடம் ரயில்வே நிலையம் திருச்சிராப்பள்ளி.

 அனைவரும் கலந்துகொண்டு சிறபிக்கவேண்டு கிறோம்.

நமது சங்க தோழர்கள் -GDS-க்கு  PAY COMMISSION சம்பந்தமாக கோரிக்கைமனு  தயாரிக்க உதவவேண்டும்  என நினைப்பவர்கள் அவர்களை அழைத்து வந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமாக கேட்டுகொள்கிறேன்

அறிவரசு  செயலர் 

கடலூர் கோட்டம்

 

 


Tuesday, February 23, 2016

நன்றி, நன்றி, நன்றி

வெள்ள முன் பணம் கிடைத்திட பெரு முயற்சி செய்து  கிடைக்க செய்த மாநில செயலர் ஜ இராமமூர்த்தி அவர்களுக்கு, கடலூர் கோட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

கடலூர் கோட்ட கண்காணிப்பாளர்,  அவர்களுக்கும் கோட்டசங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது


அறிவரசு 

Monday, February 22, 2016

நோட்டீஸ் எண் 5



NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – குரூப் “C
கடலூர் கோட்டம் – கடலூர் -607001.
சுற்றறிக்கை எண் 05                                                                                 தேதி : 13.02.2016
P.RAVI, PRESIDENT                           ARIVARASU.C,                 R.JAYAKUMAR, FINANCIAL
9842499049                      SECRETARY            SECRETARY  9943661838
அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே! அன்பு வணக்கம்.

      நமது கோட்ட செயற்குழு கூட்டம் 31.01.2016 தேதி கடலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் மாலை 3.00 மணிக்கு துவங்கி தலைவர் தோழர் P ரவி  அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதுசமயம் பல்வேறு பொருள்கள் பற்றிய விவாதம் நடைபெற்று  கீழ் கொடுக்கப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.       சுமார் 1952 இல் கட்டப்பட்ட நமது சங்கத்திற்கு சொந்தமான  சங்க கட்டிடம் தற்போது உபயோகிக்கும் நிலையில் இல்லை அதனை திரும்பவும் பயன்படுத்துவது குறித்து விவாதித்து முடிவில்  மூவர் குழு அமைக்க தீர்மானம் செய்யப்பட்டது அதன் படி S.சிவகுமார்,        P. பால் தேவசகாயம், மற்றும் R. மனோகரன் ஆகிய மூவரைகொண்ட குழு அமைக்கபட்டது இவர்கள் சங்க கட்டிடத்தை எப்படி பராமரிப்பது, என்ன செய்வது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை பற்றிய குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை ஏப்ரல் 10 ம் தேதியில் செயற்குழு கூட்டத்தில் சமர்பிக்க கேட்டுகொள்ளபட்டது.
2.       கடலூர் கோட்டத்தில் உள்ள அனைத்து NFPE சங்கங்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு அமைப்பது,
3.       மற்றும் GDS NFPE சங்கம் அமைப்பதற்கு  முழு ஒத்துழைப்பையும்  அளிப்பது  எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் சங்கம் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.

              ஜனவரி மாத  மாதாந்திர பேட்டி 25.01.2016 அன்று நடைபெற்றது. செயலருடன் P..மனோகரன், SPM CN PALAYAM., AND  K.செந்தில்முருகன் SPM SRIMUSHNAM  ஆகிய  , தோழர்கள் கலந்துகொண்டனர். பேட்டியில் பேசி தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள்  அனைத்தும் நமது வெப்பில் up load செய்யப்பட்டுள்ளது. (aipeup3cuddalore@blogspot.com)

     நமது கோட்ட FEBRAUARY (2016) மாத மாதாந்திர பேட்டி வரும் 25.02.2016 அன்று நடைபெற இருப்பதால் தங்களது  பிரச்சனைகளை  வரும் 20.02.2016 க்குள்  கோட்ட செயலரிடம்    e mail, or cell phone (chinnadeeran@gmail.com) (9486457474) மூலமாக  தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் , மற்றும்  அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் நமது உறுப்பினர்களை தொடர்புகொண்டு பிரச்சினைகள கேட்டறிந்து செயலருக்கு தெரிவிக்க  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

                                                                    தோழமையுள்ள
                                             CPJ.கென்னடி (எ)அறிவரசு  C
                                                           

Tuesday, February 16, 2016

தலைநகர மற்றும் மாநில அளவிலான செய்திகள்

Monday, February 8, 2016

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு மாபெரும் வெற்றி



மாநிலச் சங்கத்தின்  இடைவிடாத  
முயற்சிக்கு  மாபெரும் வெற்றி !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

நம்முடைய நீண்ட நாள் கோரிக்கை , காலாவதியான கணினி மற்றும் அதன் உபகரணங்கள் மாற்றப் படவேண்டும் என்பதே . இது கிட்டத்தட்ட நாடு முழுமைக்குமான பிரச்சினை என்றபோதிலும் நம்முடிய மாநிலச் சங்கம் தீவிர முயற்சி எடுத்து RJCM , FOUR  MONTHLY MEETING  களில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுகளில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் CONDEMNATION REPORT  பெற்று  அதன் அறிக்கை DIRECTORATE க்கு அனுப்பப்பட்டது உங்களுக்கு  பலமுறை  வலைத்தளம் மூலம் செய்தியாக  தெரிவித் திருந்தோம்.

மேலும் இதன் மீது அழுத்தம் கொடுத்திட  கடந்த 16.12.2014 JCM  இலாக்கா குழு  கூட்டத்தில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு  அதற்கான உரிய பதிலும் பெறப்பட்டது. 

இருந்தபோதிலும்  சரியான நடவடிக்கை இல்லாததால் கடந்த 26.3.2015 ஒரு நாள்  மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடத்தி அதில் இந்தக் கோரிக்கை பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது. 

மேலும் நம் மாநிலச் செயலர் , அகில இந்திய சங்கத்தின்  தலைவரான வுடன்  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலம் கடந்த    13.6.2015 மற்றும்  24.11.2015 தேதிகளில்  துறை முதல்வருக்கு கடிதம் அளித்து பேசினோம். இதன் தொடர்ச்சியாக கடந்த 23.12.2015 அன்று  இலாக்கா , டெக்னாலஜி பிரிவிற்கு  உடன் நடவடிக்கை கோரி அறிவுறுத்தியது. 

தற்போது  கடந்த 12.1.2016இல்  நம்முடைய பொதுச் செயலருக்கு ஏற்கனவே  CONDEMN  செய்யப்பட  கணினி மற்றும் அதன் உபசாதனங்கள் மாற்றிட  SUPPLY  ORDER  வைக்கப் பட்டுள்ளதாக  எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது.  இவையெல்லாம் தமிழக அஞ்சல் வட்டத்திற்கு மட்டுமே . 

மேலும் இதன் அடிப்படையில் தற்போது  கடந்த 2012-13, 2013-14 நிதி ஆண்டுகளில்  CONDEMNATION  REPORT  அளிக்கப் பட்ட கோட்டங்களில்   கணினிகள் புதிதாக REPLACE  செய்யப் பட்டு வருகின்றன என்பது நமது தமிழக  அஞ்சல் மூன்று சங்கத்தின்  இடைவிடாத முயற்சிக்கு கிடந்த வெற்றியாகும் . 

அப்படி   கடந்த  ஆண்டுகளில் SCRAP செய்யப்பட அளிக்கப்பட்ட பரிந்துரைப்படிபுதிய கணினிகள்  வழங்கப்படாத  கோட்டங்கள் இருப்பின்  உடன்  அந்தந்த  கோட்ட  கண்காணிப்பாளர்களை  கோட்டச் செயலர்கள் அணுகிட வேண்டுகிறோம். 

இதனை  வேறு  எவரின் முயற்சியாலோ கிடைத்தது என்று  சிலர்  நம் சங்க  உறுப்பினர்களிடையே பிரச்சாரம்  செய்திட இடம் கொடுக்க வேண்டாம்  என்று  அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  இந்த செய்தியை  கீழ் மட்ட உறுப்பினர்களிடம்  கொண்டு செல்ல வேண்டும்  என்றும்  கேட்டுக் கொள்கிறோம்.  இதன் மூலம்  நம் சங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி எதிர்வரும்  ஏப்ரல் திங்களில் மேலும் நம் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை  பலப்படுத்திட வேண்டுகிறோம்.  நம் சங்கத்தின்   இடை விடாத செயல்பாடுகளை  கீழ் மட்டம் வரை  கொண்டு செல்ல வேண்டு கிறோம். மேலே நாம் கூறிய   கடிதங்களின் நகல்களை உங்களின் பார்வைக்கு  கீழே  தருகிறோம்.