NFPE
அனைத்திந்திய
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – குரூப் “C”
கடலூர்
கோட்டம் – கடலூர் -607001.
|
சுற்றறிக்கை எண் 05 தேதி : 13.02.2016
P.RAVI, PRESIDENT ARIVARASU.C, R.JAYAKUMAR, FINANCIAL
9842499049 SECRETARY SECRETARY 9943661838
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே! அன்பு வணக்கம்.
நமது கோட்ட செயற்குழு கூட்டம் 31.01.2016 தேதி கடலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் மாலை 3.00 மணிக்கு துவங்கி தலைவர் தோழர் P ரவி அவர்கள்
தலைமையில் நடைபெற்றது அதுசமயம் பல்வேறு பொருள்கள் பற்றிய விவாதம் நடைபெற்று கீழ் கொடுக்கப்பட்ட தீர்மானங்கள்
எடுக்கப்பட்டது.
1.
சுமார் 1952 இல் கட்டப்பட்ட நமது சங்கத்திற்கு சொந்தமான சங்க கட்டிடம் தற்போது உபயோகிக்கும் நிலையில்
இல்லை அதனை திரும்பவும் பயன்படுத்துவது குறித்து விவாதித்து முடிவில் மூவர் குழு அமைக்க தீர்மானம் செய்யப்பட்டது அதன்
படி S.சிவகுமார், P. பால் தேவசகாயம், மற்றும் R. மனோகரன் ஆகிய மூவரைகொண்ட குழு அமைக்கபட்டது இவர்கள் சங்க
கட்டிடத்தை எப்படி பராமரிப்பது, என்ன செய்வது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை பற்றிய குறைந்தபட்ச
செயல் திட்ட அறிக்கையை ஏப்ரல் 10 ம் தேதியில் செயற்குழு கூட்டத்தில் சமர்பிக்க கேட்டுகொள்ளபட்டது.
2.
கடலூர் கோட்டத்தில் உள்ள அனைத்து NFPE சங்கங்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு அமைப்பது,
3.
மற்றும் GDS NFPE சங்கம் அமைப்பதற்கு முழு
ஒத்துழைப்பையும் அளிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் சங்கம்
புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.
ஜனவரி மாத மாதாந்திர பேட்டி 25.01.2016 அன்று நடைபெற்றது. செயலருடன் P..மனோகரன், SPM CN PALAYAM.,
AND K.செந்தில்முருகன் SPM
SRIMUSHNAM ஆகிய , தோழர்கள்
கலந்துகொண்டனர். பேட்டியில் பேசி தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நமது வெப்பில் up load செய்யப்பட்டுள்ளது. (aipeup3cuddalore@blogspot.com)
நமது கோட்ட FEBRAUARY (2016) மாத மாதாந்திர பேட்டி வரும் 25.02.2016
அன்று நடைபெற இருப்பதால் தங்களது
பிரச்சனைகளை வரும் 20.02.2016
க்குள் கோட்ட செயலரிடம் e mail, or cell phone (chinnadeeran@gmail.com) (9486457474) மூலமாக
தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் , மற்றும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் நமது
உறுப்பினர்களை தொடர்புகொண்டு பிரச்சினைகள கேட்டறிந்து செயலருக்கு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
CPJ.கென்னடி (எ)அறிவரசு C
No comments:
Post a Comment