அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் , மூன்று
கடலூர் கோட்டம்.
தோ.T.ராதாகிருஷ்ணன் தோ.P.ரவி தோ.R.ஜெயக்குமார்
Elected President Elected
Secretary Elected Treasurer
அலைபேசி:-9976226561 அலைபேசி:-9842499049
அலைபேசி:-9943661838
சுற்றறிக்கை:-7 தேதி:- 09.10.2013
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே! வணக்கம்!இந்த சுற்றறிக்கையின் வாயிலாக நமது உறுப்பினர்களை
சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். NCA எழுச்சி பாசறை என்னும் பெயரில் சில
தோழர்கள், திட்டமிட்டு நடத்தப்பட்ட சனநாயக படுகொலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளார்கள்.
அந்த அறிக்கையில் NCA எழுச்சி பாசறை கீழ் நம்முடைய உயிர் மூச்சாய் இருக்கும்
தொழிற்சங்கத்தின் பெயர்.இதிலிருந்தே இவர்களுடைய ஏகாதிபத்திய சிந்தனை வெளிப்படுகிறதே!
யாரோ எழுதிக்
கொடுத்த அறிக்கையை அப்படியே சுற்றுக்கு அனுப்பியிருக்கும் எங்கள் மரியாதைக்குரிய தோழர்களே!2008
-ஆம் ஆண்டு தான் கடலூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் கோட்ட மாநாடு நடந்தது.தொடர்ந்து
திட்டமிட்டு தவறான பொய் பிரச்சாரம் செய்து வரும் தோழர்களே!இதிலுமா தவறான தகவல்!நமக்கு
எதிராய் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்ட பொய் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், சில உண்மைகளை
இளைய தோழர்களுக்கும், குறிப்பாக 2008-ஆம் ஆண்டுக்கு பின் இயக்கத்தில் சேர்ந்த தோழர்களுக்கும்,
மூத்த தோழர்களுக்கு சில நிகழ்வுகளையும் நினைவுபடுத்த விழைகிறோம்.
வரலாறு
பேசும் உண்மைகள்!
2008-ஆம் ஆண்டு
கடலூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கோட்ட மாநாட்டை வழிநடத்தியவர் அப்போதைய
கோட்ட செயலாளர் தோ.M.சுந்தரமூர்த்தி அவர்கள். எந்த ஒரு மாநாட்டிலும் முதலில் ஈராண்டறிக்கை,
பின்பு ஈராண்டு வரவு-செலவு கணக்கு பொதுக்குழுவின் முன் வைக்கப்படும்.இவ்விரண்டையும்
பொதுக்குழு ஏகமனதாக அங்கீகரித்த பிறகே நிர்வாகிகள் தேர்வு நடைபெற வேண்டும்.இதுவே அமைப்பு விதி!. அவ்வாறிருக்க அப்போதைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு கணக்கில்
ஏகப்பட்ட ஊழல்கள்!.ஆறாவது ஊதியக்குழுவின் அரியர்ஸ் வந்தபோது உறுப்பினர்களிடம் நன்கொடையாக
பெறப்பட்ட தொகையில் ஏகப்பட்ட முறைகேடுகள். இன்று வரை அந்த கணக்கு முறையாக காட்டப்படவில்லை.இதை
கண்டித்து அப்போது மூத்த தோழர்கள் தலைமையில் பெரும்பான்மையான தோழர்கள் ஆர்பரித்து எழுந்து
தனியாக மாநாட்டை நடத்தி தங்கள் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். அந்த நிர்வாகிகளின் பட்டியலில்
தலைவராக தோ.P.ரவி அவர்களும்,செயலராக தோ.C.ராயப்பன் அவர்களும்,பொருளாளராக தோ.C.அறிவரசு(பால்
ஜான் கென்னடி) அவர்களும்,அமைப்பு செயலாளர்களில் ஒருவராக தோ.பால் தேவ சகாயம் அவர்களும்,
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதும் வரலாறு!
இதுவெல்லாம்
தோ.பால்
தேவ சகாயத்துக்கும்,தோ.C.அறிவரசு(பால் ஜான் கென்னடி) அவர்களுக்கும், தோ.P.மனோகரன் அவர்களுக்கும் மறந்து விட்டதா?அல்லது
வசதியாக மறந்து விட்டார்களா?அவ்வாறிருந்தால் உங்கள் பின்புறம் இருந்து இயக்கும் தோழர்களிடம்
கேளுங்கள் அவர்கள் ஒருவேளை உண்மை பேச கூடும்!
2012-ல் இது போல் ஒரு நிகழ்வாது நிகழ்ந்ததா? நம் மரியாதைக்குரிய மாநில செயலர் தோ.J.ராமமூர்த்தி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நம் மரியாதைக்குரிய
தோ.பால் தேவ சகாயம் அவர்கள், உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும் தனக்கு சனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று?
நீதி எங்கே?
1.அண்மையில் விருத்தாசலம் கோட்ட மாநாடு மங்கலம்பேட்டையில் நடைபெற்றது. அங்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 79, பதிவான வாக்குகளோ 80, வெற்றி வித்தியாசாமோ 1 (ஒன்று) மட்டுமே. நிலைமை இவ்வாறிருக்க மாநில செயலர் அவர்கள் உடனடியாக அந்த கோட்டத்தை அங்கீகரித்து
CPMG Madam அவர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.இன்று வரை அது போல் ஏன் கடலூருக்கு கொடுக்கவில்லை என்றால் பதில் சொல்வதற்கு தான் ஆளில்லை!
2. தொழிற்சங்கத்தை முடக்கி வைத்திருப்பது யார் என்ற உண்மையை உறுப்பினர்களிடம் தெரியப்படுத்துவது, மூத்த தோழர்களின் மனதை புண்ப்படுத்துவது போல் ஆகுமா?
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மாநில மாநாடு:-
கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு கடந்த 05-10-13 அன்று சென்னையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில தலைவராக அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோ.J.ராமமூர்த்தி அவர்களும்,செயலராக AGoffice இருந்து தோ.துரைபாண்டியன் அவர்களும்,பொருளாராக தோ.S.சுந்தரமூர்த்தி
(Income Tax Dept ) அவர்களும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.அவர்களுக்கு கடலூர் கோட்டத்தின் வாழ்த்துக்கள்!
நமது அகில இந்திய சங்கத்தின் பொதுச்செயலாளரும்,நமது NFPE சம்மேளனத்தின்
பொதுச்செயலாளரும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா. பொதுச்செயலாளருமான தோ.M.கிருஷ்ணன்
மாநாட்டில் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்!.
மாபெரும்
காலவரையற்ற வேலைநிறுத்தக்கோரிக்கைகள்:-
1. ஏழாவது ஊதியகுழுவை 1-1-2011 முதல் அமைக்க வேண்டும்.
2. 50% DA வை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.
3. அனைத்து ஊழியர்களுக்கும் ஐந்து கட்ட பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
4. அனைத்து கிராமப்புற ஊழியர்களுக்கும் ஊதிய மாற்று விகிதத்தை ஏழாவது
ஊதியக்குழுவில் பரிசீலிக்க வேண்டும்.
5. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
போன்ற 15 முக்கிய கோரிக்கைகளை
வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு
ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பாக நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற
உள்ளது. இதற்கான தேதி 18-10-13 அன்று புது டெல்லியில் நடைபெறும் மத்தியரசு மகா சம்மேளனத்தின்
செயற்குழுவில் அறிவிக்கப்பட உள்ளது.
நமது
கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட போரட்டத்திற்கு தயாராவீர்!தோழர்களே!
நீதியின் போராட்டம்:-
இது பதிவிக்கான போராட்டம் அல்ல!
தோழர்களே!
நீதிக்கான போராட்டம்! நீதியின் போராட்டம்!
தொழிற்சங்கப்போராளி தோ.K.G.Bose,தொழிற்சங்கமேதை,தோ.NCA அவர்களின் வழியில் தொடர்ச்சியாக முன்னேறுவோம்.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி
நமதே!
No comments:
Post a Comment