NFPE NFPE NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் , மூன்று
கடலூர் கோட்டம்.
தோ.T.ராதாகிருஷ்ணன் தோ.P.ரவி தோ.R.ஜெயக்குமார்
Elected President Elected Secretary Elected Treasurer
அலைபேசி:-9976226561 MobileNo:-9842499049 அலைபேசி:-9943661838
Elected President Elected Secretary Elected Treasurer
அலைபேசி:-9976226561 MobileNo:-9842499049 அலைபேசி:-9943661838
சுற்றறிக்கை:-9
தேதி:- 30.12.2013
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
வணக்கம்! மீண்டும் இந்த சுற்றறிக்கை வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
NFPE
இயக்கத்தின் வைரவிழா கொண்டாட்டம்:-அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
வணக்கம்! மீண்டும் இந்த சுற்றறிக்கை வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்திய அஞ்சல்துறையில்
முன்னோடி சங்கமும், இந்திய துணைக்கண்டத்தில் உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைக்களுக்காக
உரத்தக்குரல் கொடுத்து,உறுதியுடன் நின்று போராடி வெற்றியும் பெறும், பேரியக்கமுமான
நம்முடைய உயிர் மூச்சாய் இருக்கும் NFPE சம்மேளனத்தின் வைர விழா கொண்டாட்டம், 24-11-2013 முதல் 24-11-2014 வரை ஒரு வருடம் கொண்டாட
முடிவு செய்யப்பட்டு அனைத்து மட்டங்களிலும் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டு வருகிறது!.
மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம்:-
நம் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்றின் அகில இந்திய பொதுச்செயலாளரும்,NFPE சம்மேளனத்தின் மா.பொதுச்செயலாளரும்,மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளருமான நம் பெரும்மதிப்பிற்குரிய தோ.M.கிருஷ்ணன் அவர்கள் 2-12-2013 முதல் 06-12-2013 வரை ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற "உலகமயமாக்கலும், தொழிற்சங்கத்தின் உரிமைகளும் " என்ற கருத்தரங்கில் உலகெங்கும் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளின் மத்தியில் எழுச்சியுரையாற்றி வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார்கள். அவர்க்கு நம் கடலூர் கோட்டத்தின் வாழ்த்துக்கள்!.
செங்கொடிகளால் திணறிய புதுதில்லி:-
1.1-1-2014 முதல் ஏழாவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.
2. 50% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.
3. அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் 5 கட்ட பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
4. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும்.
5. அனைத்து ஊழியர்களுக்கும் GDS ஊழியர் உட்பட, அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்க கொள்ள வேண்டும்.
போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-12-13 அன்று NFPE -ன் உறுப்பு சங்கமான
AIPEU GDS (NFPE) தொழிற்சங்கத்தின் பாராளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் நாடு முழுவதும் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு
ஆர்பரித்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 12-12-2013 அன்று மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனமும், NFPE சம்மேளனம் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்ட பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியால்,புது தில்லியே செங்கொடிகளால் திணறியது என்றால் அது மிகையல்ல.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்ததினை மேற்கொள்ள நமது NFPE சம்மேளனமும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனமும் முடிவு செய்துள்ளது.
இதன் Central Executive
Meeting 9-1-14,10-1-14 அன்று தில்லியில் நடைபெற உள்ளது.அதில் வேலைநிறுத்ததிற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பாக்கபடுகிறது.
GDS
வாழ்வில் புதிய விடியல்:-
1977 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், GDS தோழர்களை இலக்கா ஊழியர்களாக அங்கீகரிக்க கோரி நமது NFPE சம்மேளனமும், AIPEU GDS (NFPE) தொழிற்சங்கமும்,தொடர்ந்த வழக்கில் , வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு புதுதில்லி உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்திரவு இட்டுள்ளது. GDS தோழர்களின் வாழ்வில் இந்த தீர்ப்பு ஒரு மைல்கல்லாக அமையும் என்றே நம்புகிறோம்.
பணிநிறைவு பாராட்டு விழா:-
நம்முடன் 38 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி நம் அஞ்சல்த்துறைக்கும், தொழிற்சங்கத்திற்கும் அளப்பரிய பணியாற்றியவரும், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்று, கடலூர் கோட்டத்தின் தலைவராக சனநாயகமாக தேர்ந்தேடுக்கபட்டவருமான நம் பெரும்மதிப்பிற்குரிய தோ.T.ராதாகிருஷ்ணன், PRI(P),CHIDAMBARAM HO, அவர்கள் 31-12-2013 அன்று பணிஓய்வு பெறுகிறார்.
தொழிற்சங்கத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகவும்,தலைவரை கௌரவிக்கும் விதமாகவும் அவரின் பணி நிறைவு பாராட்டு விழாவை நம் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், மூன்றின் சார்பாக விமர்சையாக கொண்டாட நம் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டதின்
பெயரில், தலைவரின் பணி நிறைவு பாராட்டு விழா 05-01-2014 அன்று நெய்வேலி
டவுன்ஷிப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து
கொள்கிறோம், எனவே
நம் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
நேரம்:- காலை 11.00AM முதல் மதியம் 2.00 PM வரை
இடம்:- கம்மியூனிட்டி ஹால் (மினி) திருமணமண்டபம்
, பிளாக்-10,நெய்வேலி.
ஆலமரம் ஸ்டாப்பிங் அருகில்.
நிகழ்ச்சி நிரல்:-
இறை வணக்கம்
வரவேற்புரை:-
தோ.P.ரவி Secretary(Elected),AIPEUP3,Cuddalore
Division @ Annamalainagar -608002.
தலைமை :-தோ.C.ராயப்பன், Vice President,(Elected),AIPEUP3,Cuddalore Division @ Panruti -607806.
முன்னிலை :-
தோ.S.அப்துல் ரஹீம்,Vice President,(Elected),AIPEUP3,Cuddalore
Division @ Chidambaram -608001.
தோ.P.நடனசபாபதி,Ex-President, AIPEUP3,Cuddalore Division @ Neyveli-607801.
வாழ்த்துரை :-
தோ.K.கொளஞ்சி, Organisation Secretary, AIPEUP3, Cuddalore Division@Neyveli-607803.
தோ.N.தட்சிணாமூர்த்தி,President,NUPEP3(FNPO),CuddaloreDivision@Chidambaram
-608001.தோ.R.ராமசாமி,Secretary,NUPE P3(FNPO),Cuddalore Division @ Vadalur -607303.
தோ.P.செல்வராஜ், Secretary,AIPATSEWA, Cuddalore Division @ Chidambaram -608001.
தோ.K.குணசேகரன்,Secretarty,AIPEUP4,Cuddalore division@ Chidambaram-608001.
தோ.A.ஜெயம், Convenor, Mahila Working Committee, Cuddalore division @ Block -18,Neyveli -607803.
தோ.K.செந்தில்முருகன்,Asst.Secretary(elected),AIPEUP3,CuddaloreDivision@Sethiathope-608702.
தோ.B.துரைசாமி, Asst.Secretary(elected),AIPEUP3,CuddaloreDivision@Neyveli Second mines-607802.
தோ.பெ.தாமோதரன்,Asst.Secretary(elected),AIPEUP3,CuddaloreDivision@Chidambaram-608001.
தோ.D.வைத்தியநாதசாமி,ExecutiveMember,AIPEUP3,Cuddalore division@T.Nedunjeri-608305.
ஏற்புரை:-
பெருமதிப்பிற்குரிய தோ.T.ராதா கிருஷ்ணன் அவர்கள்,
President(Elected),
AIPEUP3,Cuddalore Division @ Chidambaram -608001.
நன்றியுரை:-
தோ.R.ஜெயக்குமார்,
Treasurer,AIPEUP3, Cuddalore Division @ Neyveli -607803.
தேசியகீதம்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment