85 RRR ஊழியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவு !
ஏற்கனவே விடுபட்ட 85 RRR ஊழியருக்கு பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 20.06.2014 இல் இலாக்காவுக்கு உத்திரவிட்டது உங்களுக்குத் தெரியும்.
இந்த உத்திரவின் மீது SLP மேல் முறையீடு செய்ய நம்முடைய இலாக்காவில் தீர்மானித்து , அது குறித்து சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற கோப்புகள் அனுப்பப்பட்டன. இதில் ஆன கால தாமதம், RRR ஊழியர்களுக்கு சாதகமானது.
எனவே CONTEMPT PETITION FILE செய்து உறுத்து ஆணை பெற்றதால் , வேறு வழியின்றி WP NO . 16041/2014 இல் வழக்கு நடத்திய 85 RRR ஊழியர்களுக்கும் உடனடி பணி நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இது தனியே வேறு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
உத்திரவு நகலை கீழே பார்க்கவும் :-
விடாது போராடி வெற்றி பெற்ற RRR ஊழியர்களுக்கு நம் கடலூர் அஞ்சல் மூன்று சங்கத்தின் வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment