தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் தலைவர்
தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள்
கைபேசி 09444226540
இன்று (11.07.2016) காலை இலாக்காவிலிருந்து
தன் விருப்ப ஓய்வு பெறுகிறார்.
அஞ்சல் மூன்று சங்கத்திலும் NFPE இயக்கத்திலும் அவர்
ஆற்றிய பணி அளப்பரியது. சொல்லாற்றல் , அறிவாற்றல் ,
ஆளுமைப் பண்பு , மாநாடுகளை தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அவரது சீரிய பாங்கு, தோழமையோடு அனைவருடனும்
அவரது பழகும் குணம் , தான் எடுத்துக் கொண்ட
கொள்கைகளில் சமரசமில்லா குணம் , அதிகாரிகளுடன்
ஊழியர்கள் பிரச்சினைகளில் அவரது
வாதிடும் பாங்கு என்று எல்லாவற்றிலும் தனி
முத்திரையைப் பதித்தவர் தோழர் . ஸ்ரீவி அவர்கள் .
அவரது சொந்த காரணங்களுக்காக அவர் தன் விருப்ப ஓய்வில் சென்றாலும் அவரது தன் விருப்ப ஓய்வு என்பது நமது அஞ்சல் மூன்று இயக்கத்திற்கு நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.
அவர் தன் விருப்ப ஓய்வில் சென்றாலும் இயக்கத்திற்கு நிச்சயம்
அவரது பணி தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். அவரது வருங்காலம் மேலும் சிறப்புற அஞ்சல் மூன்று
மாநிலச் சங்கம் மனமார வாழ்த்துகிறது.
with warm wishes,
AIPEU P3,CUDDALORE DIVISION
@ 608001
No comments:
Post a Comment