Tuesday, August 9, 2016

TN NFPE COC - LUNCH HOUR DEMONSTRATION CONDUCTED IN FRONT OF O/O CPMG,TN AGAINST OUTSOURCED POSTAL AGENTS SYSTEM

இலாக்கா புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள OUTSORUCED POSTAL AGENTS SYSTEM மூலம்  தனியார் நிறுவனங்களுக்கு அஞ்சல் துறையின் ECOMMERCE, BPC,SPCC பகுதிகளில் SPEED POST, REGISTERED POST மற்றும் PARCEL  இனங்களில்  COLLECTION, PICK UP, BOOKING, DESPATCH மற்றும்  ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை தினங்களிலும்  பட்டுவாடா என  எல்லா பகுதிகளிலும் வேலையையும்  CONTRACT முறையில் அளிப்பது ஆகும்.  

இந்த  நாசகார  திட்டத்தின் மூலம்   பல வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து இந்த தனியார் நிறுவனங்களே பெருமளவிலான கடிதங்கள் மற்றும் பார்சல்களைப் பெற்று  BOOK செய்து பட்டுவாடா வரை  தினக் கூலிகளை அமர்த்திக் கொண்டு  அந்தப் பணியை செய்வதனால் ,  இலாக்கா  அலுவலகங்களில்  BUSINESS பெருமளவில் குறையும். இதனால்  தேவையில்லை என்று காரணம் கூறி  ஆட்குறைப்பு  பெருமளவில் செய்யப்படும். மேலும் ஊழியர்கள் நெருக்கடிக்கு  உள்ளாக்கப்பட்டு  இடமாறுதல் செய்யப்படுவார்கள். இலாக்கா  பணி  என்பது தனியார் நிறுவனங்களின் கையில் படிப்படியாக செல்லும்.  மேலும் எந்தவித  ஊதியப் பாதுகாப்போ  அல்லது பணிப் பாதுகாப்போ இல்லாமல்  குறைந்த பட்ச தினக்  கூலி அடிப்படையில் லட்சக்கணக்கான அளவில் நாடு முழுவதும்  கொத்தடிமைக்  கூட்டம் உருவாக்கப்படும்.  

ஏற்கனவே அஞ்சல் துறைக்கு துளியும்  சம்பந்தமே  இல்லாத அளவில்   PAYMENT BANK என்பது அஞ்சலகத்தில்  இயங்கிட  அரசு  முடிவெடுத்து அமல் படுத்த  தேதி நிர்ணயம் செய்துள்ளது. மறுபகுதியில்   லிமிடெட்  கம்பெனி  என்பது  PHILATELY யில் அறிவிக்கப் பட்டுள்ளது. 


இந்தக் கொடுமைகளை தடுத்து நிறுத்திட முதற் கட்டமாக  தமிழக  NFPE COC மூலம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை   நாம்  இன்று  வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக அகில இந்தியா முழுமைக்கும் போராட்ட அறிவிப்பு நடத்திட சம்மேளன மற்றும் அகில இந்திய சங்கங்களை கோரியுள்ளோம். நமது சம்மேளன மாபொதுச் செயலரும் இதே  கருத்தை  வலியுறுத்தி நேற்று  துறை  செயலரிடம் கடிதம் அளித்துள்ளார். இந்தத்திட்டம்  கைவிடப்படவில்லையானால் எதிர்  வரும் நாட்களில் போராட்ட வீச்சு பெருகும்.  இந்த  நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படாங்களின் நகல்களை கீழே பார்க்கலாம்.


No comments:

Post a Comment