Sunday, December 11, 2016

வெற்றி பெற்ற தோழர்களின் பணி சிறக்க கடலூர் கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்!

TRICHIRAPPALLI, MAYILADUTURAI AND DHARMAPURAM P 3 CONFERENCES - CIRCLE UNION WISHING THE NEWLY ELECTED OFFICE BEARERS !

திருச்சிராப்பள்ளி  அஞ்சல் மூன்று கோட்டச்     சங்கத்தின்   ஈராண்டு     மாநாடு   கடந்த 27.11.2016 அன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர்  தோழர். S . ரகுபதி, அஞ்சல் மூன்று மாநில அமைப்புச் செயலர்  தோழர். C . சசிகுமார்  உள்ளிட்ட அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , GDS சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்பு ஈராண்டுக்கான  நிர்வாகிகள்

தலைவர்                                        : தோழர்.  J. ஜானகிராமன் 
கோட்டச்  செயலர்                     : தோழர். K . மருதநாயகம்  
நிதிச் செயலர்                              :  தோழர். R . கிரிபாலன் 

மயிலாடுதுறை அஞ்சல் மூன்று கோட்டச்  சங்கத்தின்  ஈராண்டு     மாநாடு கடந்த 27.11.2016 அன்று மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. இராமமூர்த்தி , மாநில உதவித் தலைவர் தோழர். R . பெருமாள் , தஞ்சை அஞ்சல் மூன்று கோட்டச்  செயலர் தோழர். செல்வகுமார், சீர்காழி அஞ்சல் மூன்றின் முன்னாள் செயலர் தோழர். N . நடராசன்,  இந்நாள் செயலர் தோழர். ராஜா  உள்ளிட்ட அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , GDS சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்பு ஈராண்டுக்கான  நிர்வாகிகள்

தலைவர்                                        : தோழர். G. ஊமதுரை 
கோட்டச்  செயலர்                     : தோழர். V. மோகன்குமார் 
நிதிச் செயலர்                              :  தோழர். S. விமல் நாயக் 

தருமபுரி அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் ஈராண்டு மாநாடு  கடந்த 04.12.2016 அன்று தருமபுரி ஸ்ரீநிவா மஹாலில்  சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S., அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. இராமமூர்த்தி , மாநில நிதிச்செயலர் தோழர். A .வீரமணி  , கிருஷ்ணகிரி  அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். செல்வம்,   உள்ளிட்ட அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , GDS சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்பு ஈராண்டுக்கான  நிர்வாகிகள்

தலைவர்                                        : தோழர். K . அறிவழகன்  
கோட்டச்  செயலர்                     : தோழர். V. பழனிமுத்து  
நிதிச் செயலர்                              :  தோழர். M.  பிரதீப் குமார் 

மயிலாடுதுறை மற்றும் தருமபுரி கோட்ட  மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

Courtesy:- http://aipeup3tn.blogspot.com

வெற்றி பெற்ற தோழர்களின் பணி சிறக்க கடலூர் கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment