Thursday, November 5, 2015

கடலூர் கோட்ட ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !

கடலூர் கோட்ட   ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !

தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக  குடும்பத்துடன் கொண்டாடும் வண்ணம் WCTC திருச்சியில் 09.11.2015 முதல் 14.11.2015 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  CBS  FINACLE  TRAINING ரத்து செய்யப் பட்டது. திருச்சி மண்டல PMG அவர்களுக்கு நம் நன்றி.   உத்திரவின்  நகல்  கீழே :-        

 " In accordance with the orders contained in R.O mail dated 03/11/15 in file no STB/48-1/15/CBS, the CBS Finacle training for Postal Assistants for the period from 09/11/15 to 14/11/15 at WCTC,Tiruchirapalli-1 stands Cancelled."

09.11.2015 PTC  மதுரை பயிற்சி  வகுப்புகள் ரத்து !

மேலும், நம்முடைய  அஞ்சல்  மூன்று  மாநிலச்  சங்கத்தின் 14.10.2015 கடிதத்தின்படியான கோரிக்கையை ஏற்று தீபாவளிப் பண்டிகையை நம்முடைய தோழர்/ தோழியர்கள்  குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டு PTC மதுரையின்  அனைத்து  பயிற்சி  வகுப்புகளும் 09.11.2015 அன்று ரத்து செய்யப்பட்டுTRAINING  SESSION ஒரு  நாள்  (17.11.2015​) நீட்டிப்பு செய்யப்பட்டு  உத்திரவிடப்பட்டுள்ளது.
நமது  கோரிக்கையை ஏற்று  நடவடிக்கை எடுத்த  மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு  நம்முடைய நன்றி!
நடவடிக்கை எடுத்த மாநிலச் சங்கத்திற்கு நன்றிகள்! உரித்தாகுக!
             நம் கடலூர் கோட்டச் சங்கத்தின் முயற்சியின் விளைவாக மேற்குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயிற்சி வகுப்புகள் ரத்து செயப்பட்டன!, இது போலவே நமது WCTC சிதம்பரம் பயிற்சி மையத்திலும் 09.11.15 அன்று நடக்க உத்தரவிடப்பட்டு இருந்த வகுப்புகள் ரத்து செய்வது தொடர்பாக நமது கண்காணிப்பாளரிடம்   கோட்டச்சங்கத்தின் சார்பாக பேச்சு நடைபெற்றுவருகிறது. அனேகமாக அந்த வகுப்பும் ரத்து செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்! 
தோழமையுடன்!

செயலர்!
AIPEUP3 கடலூர் கோட்டம்!
@ சிதம்பரம் 
608001.


No comments:

Post a Comment