BUSINESS CONTINUITY
PLAN OR
BUSINESS CHEATING
PLAN ?
" இன்போசிசே வெளியேறு "
ஊழியர் பணியில் குறைவு ஏற்படின் இப்போதெல்லாம் WARNING கடிதம் கூட எந்த அதிகாரியும் கொடுப்பதில்லை ! உடனே குறைந்த பட்சம் விதி 16 இன் கீழ் தண்டனை தான் !
"அதுவும் திருப்தி இல்லை
" என்று மேல் முறையீட்டு அதிகாரிகள் REVIEW செய்து விதி -14 ஏன் பிரயோகப் படுத்தக்கூடாது என்று உடனே நோட்டீஸ் அளிக்கும் கொடுமை தினம் தினம் நாம் பார்க்கிறோம் !.
கேட்டால் சேவைக் குறைவை
அரசாங்கமே விரும்புவதில்லை என்ற பதில் ! உண்மையோ உண்மைதான் !
ஆனால் 1100 கோடிகள் பெற்ற INFOSYS நிறுவனத்தின் கையாலாகாத தனத்திற்கும் ஆண்டுக்கணக்கில் தொடரும் சேவைக் குறைவிற்கும் எந்த தண்டனையும் தரவேண்டும் என்று எந்த
அதிகாரியும் பேசுவது கூட இல்லை ! மாறாக சிவப்புக்கம்பள வரவேற்புதான் ! தினம் தினம் VIDEO CONFERENCING
தான் !
செயல்படாத FINACLE , MC
CAMISH குறித்து செயல்பட வைக்க முடிவுகள் எடுக்காமல் , ஊழியர்களை மேலும் வதைத்திட BUSINESS CHEATING
PLAN ( SORRY ) BUSINESS CONTINUITY PLAN தான் !
செயல்படாத சேவையை நாட்டிலேயே முதன் முதலில் நாம்தான் செய்து முடித்தோம் என்று பதக்கம் வேறு நமக்கு நாமே குத்திக் கொள்கிறோம் ! நம் கண்களை நாமே குருடாக்கிக் கொள்கிறோம் !
இந்தக் கொடுமைகள் தீர வேறு வழியில்லை ! இனி பொதுமக்கள் முன்னர்
பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டியதுதான் !
அன்று தேசத்தை காத்திட " வெள்ளையனே வெளியேறு இயக்கம் " அறிவித்தார் மகாத்மா காந்தியடிகள் !
இன்று இலாக்காவையும்
பொதுமக்கள் சேவையையும் காத்திட
" இன்போசிசே வெளியேறு " இயக்கம் அறிவிப்போம்
நாம்
!
அகில இந்திய அளவிலான இயக்கம் மற்றும் வேலை நிறுத்தத்தை நடத்திட நம் அகில இந்திய சங்கத்தை மாநிலச் சங்கம் கோரியுள்ளது !
விரைவில் அதனை நாம் எதிர்பார்க்கிறோம் !
பிரச்சினையில் முன்னேற்றம்
ஏற்படவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில்
"இன்போசிசே வெளியேறு
"
பிரச்சார
இயக்கம் நடத்திடப்படும் !
பிரச்சினையின் முழு
வடிவமும் பொதுமக்கள் மற்றும்
ஊடகங்களுக்கு எடுத்துச்
செல்லப்படும் !
சட்ட மன்ற மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மக்கள் சபைகளில் பிரச்சினை தீவிரமாக கொண்டு
செல்லப்படும் !
பொங்கி எழுவோம் ! புயலாக மாறுவோம் !
No comments:
Post a Comment