Thursday, January 14, 2016

சுற்றறிக்கை எண் 04 dt 13.01.2016




NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – குரூப் “C
கடலூர் கோட்டம் – கடலூர் -607001.

சுற்றறிக்கை எண் 04                                                                              தேதி : 13.01.2016
P.RAVI, PRESIDENT                                                                             R.JAYAKUMAR, FINANCIAL
9842499049                                                TREASURER 9943661838

அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே! அன்பு வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சங்கம் தெருவித்து கொள்கிறது.
                இந்த இனிய புத்தாண்டின் துவக்கத்தில், இந்த சுற்றறிக்கை  மூலம், சங்க செய்திகளை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. நமது கோட்டத்தில்  IPO © ஆக  பணியில் சேர்ந்து பிறகு ASP ஆக தற்போது SPO  ஆக திரு. S. சிவப்பிரகாசம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதில் நமக்கு மகிழ்ச்சி. ஊழியர்  நலனில் அதிக அக்கறை எடுத்துகொள்வார் , அதே சமயத்தில் அவவர்களுக்குரிய பணியை செவ்வனே செய்யவேண்டும் என்றும் எதிர்பார்ப்பவர்.  சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகைளை சங்க, ஜாதி, பாகுபாடில்லாமல் செய்வார். அவர் பணி நமது கோட்டத்தில் சிறந்து விளங்கிட நமது சங்கம்  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

உறுப்பினர்கள் அனைவரும் தவறமல் நமது சங்க வெப்சைட் பார்க்கவும்
Tamilnadu circle= aipeup3tn.blogspot        Cuddalore division= aipeup3 cuddalore.blogspot
தொடர்புக்கு; email- aipeup3cuddalore@gmail.com, 

அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே!
     உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும், மக்கள் நலன் பாதுகாக்க வேண்டும்  என கருதி தினசரி வேலை நேரத்தை  6 மணி நேரமாக  குறைக்க பல அயல்நாடுகள் திட்டமிட்டிருக்கும் வேளையில், நாம் 8 மணி நேரம் போய் 10/12 மணி நேரம் பணி  செய்யவேண்டிய சூழ்நிலையிலும்  கூட, நவீன தொழில் நுட்பமான  CBS ஆன போதிலும் அதை கடமையென ஏற்று  அதனை அறிந்தும்/அறியாமலும் கூட மற்றவர்களை கேட்டு பணி செய்யும் சூழலிலும்  கூட, தொல்லை தரும் பிரிண்டர் , தொய்வில்லா  மின்சாரம் (UPS) வசதி இல்லாத போதும் கூட, NET WORK PROBLEM அடிக்கடி இருந்தும் கூட நமது பணியினை மன உளைச்சலோடு  நாளடைவில் சரியாகிவிடும் (அல்லது பழகிவிடும்) என்ற நம்பிக்கையில் பணி  செய்து கொண்டிருக்கிறோம்.




                SANCHAY POST SOFTWARE இல் பணி  செய்யும் போது  நாம் ஒரே நாளில் பல கணக்குகளை துவங்கி நமது நிர்வாகம் கொடுத்த இலக்கை எட்டினோம் அதே நிலமை தற்போது இல்லை என்பதை நாமும் அறிவோம் நிர்வாகமும் அறியும். ஒரு கணக்கு துவங்கி, அதனை ஒரே நபர் VERIFICATION செய்ய பல நிமிடங்கள் ஆகும் போது, ஒரே நாளில் பல கணக்குகள் துவங்க சொல்லி SPM\PA க்களின் பணி  நேரத்தை அதிகரித்து மன உளைச்சலையும் கொடுப்பது நியாமில்லை. பல 1+1 அலுவகங்கள் CBS ஆன பிறகும் கூட PA  இல்லாமல் இருப்பது வேலை  பணி  நேரத்தை அதிகரித்து மன உளைச்சலையும் கொடுக்கிறது எனவே நிர்வாகம் உடனே தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.

                     அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே நமது கோட்ட செயற்குழு கூட்டம் வரும் 31.01.2016 தேதி கடலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் மாலை 3.00 மணிக்கு துவங்கி நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அதுசமயம் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல்  இந்த செயற்குழு கூட்டம் நமது முக்கியமான பிரச்சனையான, நமது சொத்தான நமது சங்க கட்டிடத்தினை எப்படி பராமரிப்பது அதற்கான வழிகள் பற்றிய ஆலோசனைகள் தேவை படுவதால் நமது சங்கத்தின் முன்னோடிகளுக்கும் தெரியபடுத்தி, அவர்களையும் அழைத்து வரவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.

     DECEMBER மாத மாதாந்திர பேட்டி நமது கோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படவில்லை வரும் JANUARY 2016  மாதாந்திர பேட்டி நடைபெறும் என நம்புகிறோம் எனவே  தங்களது  பிரட்சினைகளை வரும் 20.01.2016 க்குள்  கோட்ட செயலரிடம்    e mail, or cell phone (aipeup3cuddalor@gmail.com and chinnadeeran@gmail.com) (9486457474) மூலமாக  தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் , மற்றும்  அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் நமது உறுப்பினர்களை தொடர்புகொண்டு பிரச்சனைகளை கேட்டறிந்து செயலருக்கு தெரிவிக்க  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்



தோழமையுள்ள
                                                          CPJ.கென்னடி (எ) அறிவரசு  C
சிதம்பரம்                                                           கோட்ட செயலர் 9486457474


No comments:

Post a Comment