Friday, January 1, 2016

வரும் 2016 ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிதாக அமையட்டும்

வரும் 2016 ஆம் ஆண்டு  அனைவருக்கும்  இனிதாக  அமையட்டும்! ஏற்றங்களைக் கொடுக்கட்டும்! ஏமாற்றங்கள் தூக்கி  எறியப்படட்டும் ! வெற்றிகளை நோக்கி  நாம் முன்னேறுவோம் !  

வாழ்த்துக்களுடன் ==

STATE GOVT DECLARED THE STATE OF TAMILNADU AS FLOOD AFFECTED ; G.O. ISSUED - FOR GDS ALREADY APPLICATIONS CALLED - PL SEE THE ORDERS


புத்தாண்டுப்  பரிசு !  வெள்ள  முன்பணம்   
மற்றும்  உதவித்தொகை !

அன்புத் தோழர்களே  வணக்கம் !  ஏற்கனவே வெள்ள  முன்பணம் வழங்கிட அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு  CPMG  அவர்கள்  அளித்த உத்திரவின் நகல்   நமது  வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை மீண்டும் இதன் கீழே   தருகிறோம்.  அதில் மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதி என அரசாணை  வெளியிட்டிருப்பின்  இந்த  வெள்ள  முன் பணம் ரூ.7500/- விண்ணப்பித்த  ஊழியர்களுக்கு  வழங்கலாம் என்று அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் உரிய விண்ணப்பமும் அவர்களின் பொருட்கள் பாதிக்கப் பட்டதற்கான REVENUE AUTHORITY  CERTIFICATE உடன் அனுப்பப் பட்டால் WELFARE  FUND  இல்  இருந்து  GDS  ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை வழங்கப்படும்  என்று  அடுத்த  நிலை  அதிகாரிகளுக்கு  உத்திரவிடப்பட்டிருந்தது . 

இது  குறித்து  மாநில  அரசினால்  தற்போது  அரசாணை  வெளியிடப் பட்டுள்ளது. அதில் மாநிலம்  முழுதும்  வெள்ளம்  பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல்  CPMG  அவர்களுக்கும்  நம்மால்   தற்போது அளிக்கப் பட்டுள்ளது.

இதன் மீது உரிய உடன் உரிய நடவடிக்கை கோரியுள்ளோம்.  மேலும் ஏற்கனவே இதன் மீது  STANDING  ORDER  CPMG அவர்களால்  கொடுக்கப் பட்டுள்ளதால் ,  அந்தந்த  கோட்ட அதிகாரிகளை அணுகி வெள்ள முன்பணம்  பெற  கோட்ட /கிளைச் செயலர்கள் விரைந்து செயலாற்றிட  வேண்டுகிறோம் ! அனைத்தும்  கீழே  உங்கள் உடனடி உபயோகத்திற்காக அளிக்கப் பட்டுள்ளது.

Payment Of Bonus (Amendment) Bill 2015



updated
secretary cuddalore dn




No comments:

Post a Comment