Friday, November 6, 2015

SBORDER NO 14/2015 Dtd 19.10.2015

பொதுவாக இலாகா சர்குலர் வந்தால் ஒரு SPM செய்கிற முதல் வேலை அதில் ஒரு Datestamp அடித்து தன் இருக்கைக்கு பின்னால் தொங்கும் கம்பியில் படிக்கா மலே மாட்டிவிடுவார்.அது பெரிய அலுவலகம் என்றால் சுற்றுக்கு விடுவார்கள் .நாமும்  அதை படிக்காமலே நமது பெயருக்கு எதிரில் கையெழுத்து போட்டுவிடுவோம். .ஆனால் சமீப காலத்து சர்குலர் அனைத்தும் ஈமெயி லில் வருவதால் அதை எத்தனை பேர் முழுமையாக பார்த்தார்கள் என்பது தெரியவில்லை .நாமும் நமது பங்கிற்கு இலாகா உத்தரவுகளை வெப்சை டில் போட்டாலும் அது முழுமையாக படிக்க முடியவில்லை என்று அநேக தோழர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள் .அவர்களின் வேண்டுகோளை ஏற்று முக்கியமான சுற்றறிக்கைகளை மட்டுமாவது தமிழில் மொழிபெயர்த்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
அதன்படி இது SBORDER NO 14/2015 Dtd 19.10.2015உங்கள் பார்வைக்கு தரப்படுகிறது 

பொருள் :CBS நடைமுறையில் SBCO வின் இப்போதைய பங்கு
*SO கள் CBS குள் மாறிய பின் SOSB இல் பணி புரியும் ஊழியர்கள் Redeploy முறையில் counter /Cpc   /sbco பிரிவிற்கு  மா ற்றபடுவர்கள்.(ஒவ்வொரு HO விலும் கனிசமான ஊழியர்கள் ) .

*SBCO  SUPERVISOR ஒரு PA வை நியமித்து SO வில் இருந்து வரும் VOUCHER BUNDLE களை Consolidation மற்றும் SO  Summary உடன் ஒப்பிட்டு சரி பார்ப் பார்..

*ACG17யை SBCO விற்கு அனுப்ப தேவையில்லை 
.
*MPKBY Agent யிடம் இருந்து இரண்டு லிஸ்ட் வாங்க வேண்டும் .  ACG 17  ரசீதை Agent commision ரிப்போர்ட் உடன் இணைத்து A/C பிரிவிற்கு அனுப்பவேண்டும் .

*SO வில் உள்ள SB-3/AOF பாரத்தை Closure வவுச்சருடன் இனைத்து அனுப்ப வேண்டும் .KYC உடன் இனைந்த SB-3/AOF படிவங்களை மட்டும் SOவிலே பராமரிக்க வேண்டும் .மேலும்  குலோச ர் படிவத்தில் SB3-AOF Retained with KYC Documents என எழுதி அனுப்ப வேண்டும் .HO வில் உள்ள அனைத்து SB/TD  SB 3 கார்டுகளை அந்தந்த SO விற்கே திருப்பி அனுப்பிட வேண்டும் 
.
*Name of scheme மற்றும் Transaction ID யை    வவுசெரில் சிகப்பு மையினால் எழுத வேண்டும் .

*Auto credit of MIS ,/SCSS /TD மற்றும் SBto  RD கு   தனிதனியே PAYin slip /Withdrawal பாரம் கொடுக்க வேண்டும் .

*co nsolidation list of commision களுக்கும் தனித்தனி Payinslip கொடுக்க வேண்டும்.

*எல்லா வகை கணக்குகளுக்கும் CONSOLIDATION  இரு படிவம் எடுத்து ஒன்றை அந்தந்த அலுவலகத்திலும் மற்றொன்றை HO விற்கும் மொத்த தொகையை என்னாலும் /எழுத்தாலும் எழுதி அனுப்ப வேண்டும் .

*DLTமற்றும் BAT எழுத வேண்டாம் (அன்று BAT தவறுதலாக எழுதியதற்காக Rule 16 வாங்கியவர்களும் உண்டு )

*பாஸ் புத்தகத்தில் எந்த ENTRY யும் கையால் எழுத கூடாது (RDDF /REBATE தவிர )அனைத்தும் பிரிண்டர் மூலமாக இருக்க வேண்டும் (அது சரி பிரிண்டருக்கு நாங்கள் என்ன செய்ய என்று கேட்காதீர் ) 
                                                                                
நன்றி --- NFPE  Divisional Secretary, Tirunelveli

Thursday, November 5, 2015

கடலூர் கோட்ட ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !

கடலூர் கோட்ட   ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !

தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக  குடும்பத்துடன் கொண்டாடும் வண்ணம் WCTC திருச்சியில் 09.11.2015 முதல் 14.11.2015 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  CBS  FINACLE  TRAINING ரத்து செய்யப் பட்டது. திருச்சி மண்டல PMG அவர்களுக்கு நம் நன்றி.   உத்திரவின்  நகல்  கீழே :-        

 " In accordance with the orders contained in R.O mail dated 03/11/15 in file no STB/48-1/15/CBS, the CBS Finacle training for Postal Assistants for the period from 09/11/15 to 14/11/15 at WCTC,Tiruchirapalli-1 stands Cancelled."

09.11.2015 PTC  மதுரை பயிற்சி  வகுப்புகள் ரத்து !

மேலும், நம்முடைய  அஞ்சல்  மூன்று  மாநிலச்  சங்கத்தின் 14.10.2015 கடிதத்தின்படியான கோரிக்கையை ஏற்று தீபாவளிப் பண்டிகையை நம்முடைய தோழர்/ தோழியர்கள்  குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டு PTC மதுரையின்  அனைத்து  பயிற்சி  வகுப்புகளும் 09.11.2015 அன்று ரத்து செய்யப்பட்டுTRAINING  SESSION ஒரு  நாள்  (17.11.2015​) நீட்டிப்பு செய்யப்பட்டு  உத்திரவிடப்பட்டுள்ளது.
நமது  கோரிக்கையை ஏற்று  நடவடிக்கை எடுத்த  மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு  நம்முடைய நன்றி!
நடவடிக்கை எடுத்த மாநிலச் சங்கத்திற்கு நன்றிகள்! உரித்தாகுக!
             நம் கடலூர் கோட்டச் சங்கத்தின் முயற்சியின் விளைவாக மேற்குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயிற்சி வகுப்புகள் ரத்து செயப்பட்டன!, இது போலவே நமது WCTC சிதம்பரம் பயிற்சி மையத்திலும் 09.11.15 அன்று நடக்க உத்தரவிடப்பட்டு இருந்த வகுப்புகள் ரத்து செய்வது தொடர்பாக நமது கண்காணிப்பாளரிடம்   கோட்டச்சங்கத்தின் சார்பாக பேச்சு நடைபெற்றுவருகிறது. அனேகமாக அந்த வகுப்பும் ரத்து செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்! 
தோழமையுடன்!

செயலர்!
AIPEUP3 கடலூர் கோட்டம்!
@ சிதம்பரம் 
608001.


போனஸ்-ன் வரலாறு

1954ல் தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனம்(NFPTE)அமைக்கப்பட்ட பின்னர் கல்கத்தாவில் தபால்காரர் சங்க மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் சார்பாளர் ஒருவர் ஒரு காகிதத்தில் கோரிக்கை ஒன்றை எழுதி மேடையில் இருந்த தோழர் K.G. போஸ் அவர்களிடம் கொடுத்தார். அதனை படித்த கே.ஜி. போஸ் ஒரு தோழரிடம் கொடுத்து உடனே ஒரு தீர்மானமாக எழுதித் தரும்படி கேட்டு கொண்டார். பின்னர் அது மாநாட்டு தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது. அந்த தீர்மானம் இதுவே: "ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையின் போது எல்லா தபால்காரர்களுக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதனை சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது.
இந்த கோரிக்கையை எழுப்பிய அந்த ஊழியரை பாராட்டி பேசிய கே.ஜி. போஸ், " இந்த கோரிக்கையே போனஸ் கோரிக்கையாகும். எல்லா அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்ற பொருள் மிகுந்த கோரிக்கையாகும். ஊழியர்களை ஒற்றுமை படுத்தும் கோரிக்கை ஆகும்." என்று பாராட்டினார்.
1962 ல் நாக்பூரில் நடைபெற்ற NFPTE சம்மேளனக் குழு மாநாட்டில் தான் வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் என்ற தீர்மானம் தோழர்கள் N.J.ஐயர்(RMS) , சூரிய நாராயணா (TELECOM ) ஆகியோர்முயற்சியில்நிறைவேற்றப்பட்டது.
1972 அக்டோபரில் மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு டில்லியில் நடை பெற்றது. அதில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் 8.33 % குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. 
ரயில்வே ஊழியர் தொழிற்சங்கங்களில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் 8.33 % குறைந்தபட்ச போனஸ், பொதுத்துறைக்கு ஈடான ஊதியம் முதலிய கோரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றன. 
போனஸ் என்பது கொடு படாத ஊதியம். வாழ்க்கை ஊதியத்தை காட்டிலும் மிகவும் குறைந்தபட்ச ஊதியத்தை கூட அடைய முடியாத நிலையில் உள்ளதால்  "அனைவருக்கும் போனஸ் " என்ற கோரிக்கையின் பின்னால் அனைத்து ஊழியர்களையும் அணி திரட்டுவது சாத்தியமானது. வாழ்க்கை ஊதியத்துக்கும், வாங்கும் ஊதியத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யக் கூடிய  " கொடு படாத ஊதியம் " தான் போனஸ் என்று சாதாரண ஊழியர்களும் உணர்வு பூர்வமாக அறிந்தனர். அணி திரண்டனர். "போனஸ் என்பது பிச்சை அல்ல. இனாமல்ல. அது எங்கள் உரிமை " என்ற உணர்வு நாடெங்கும் எழுப்பப் பட்டது. இந்த சூழ்நிலையில் மற்றொரு பிரிவினர் “Bonus for All means Bonus for none “ என்ற எதிர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு போனசா ? ரஷ்யா போன்ற சோசியலிச நாடுகளில் கூட அரசு ஊழியர்களுக்கு போனஸ் இல்லை என்றும் கேலி பேசினர்.
1972 டிசம்பர் 10 முதல் 12 வரை  டில்லியில் கடும் குளிரில் “BONUS FOR ALL”  மற்றும் E.D. ஊழியர்கள் (இன்று  GDS) பிரச்சினைகள் குறித்தகருத்தரங்கம் நடைபெற்றது. 7 கிலோ மீட்டர் தூரம் மாபெரும் பேரணிநடைபெற்றது.  பேரணியில் கலந்து கொண்ட தொழிற்சங்க உணர்வு மிக்க தோழர்களை எதிர் அணியினர் "டில்லி ஊரை சுற்றி பார்க்க வந்த கும்பல் " என்று ஏகடியம் பேசினர்.   டில்லி கருத்தரங்கம் , பேரணி வெற்றியினை தொடர்ந்து  ஊழியர் மத்தியில் கே.ஜி. போஸ் மற்றும் தோழர்கள் என்ற BONUS FOR ALL கோரிக்கையை பிரச்சாரம் செய்தனர். மத்திய அரசு போனஸ் பரிசீலனைக் கமிட்டி ஒன்றை அமைத்தது.  1973ஜனவரி 19 அன்று " அனைவருக்கும் போனஸ் கோரிக்கை தினம்” (BONUS FOR ALL DAY) என்ற இயக்கம் நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது. ஊழியர்களை ஒற்றுமை படுத்தும் முயற்சியில் கே.ஜி. போஸ் மற்றும் அவரது சக தோழர்களும் பெரும் வெற்றி அடைந்தனர்.
1979
 ஜூலையில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு கவிழும் போது சரண் சிங் பிரதமராக விரும்பினார். அவர் பிரதமராக இடது சாரிக் கட்சிகள் நான்கு முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்தனர். அதில் ஒன்று போனஸ் கோரிக்கை ஆகும். 24நாட்களே நீடித்த அந்த அரசில் பெற்ற பலன்களை இன்றும் ஊழியர்கள் பெற்று வருகின்றனர். ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே போனஸ்முதலில் அறிவிக்கப் பட்டது. தபால் தந்தி ஊழியர்களுக்கும் உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். இல்லையெனில் வேலை நிறுத்தத்தில் ஊழியர் சங்கங்கள் ஈடுபடும் என அறிவித்தனர். அதன் பின்னர் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் அஞ்சல்,தொலைபேசி ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. தொடர் இயக்கங்களின்காரணமாக  3.11.1983 ல் தான் மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப் பட்டது. 
1996
 ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோது ஊதிய உச்சவரம்பின்றி போனஸ் வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அக்டோபர் 23 முதல் 29 வரை 7 நாட்கள் வேலை நிறுத்தம் நடை பெற்றது. இடது சாரி கட்சிகளின் ஆதரவில் அந்த அரசு நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் அரசு அவர்களது தலையீட்டிற்கு செவி சாய்த்தது. ஊதிய உச்ச வரம்பின்றி போனஸ் என்ற கோரிக்கை நிறைவேறியது.
வெளியீடு:3 : உழைக்கும் வர்க்கம் வாசகர் வட்டம், நெல்லை மாவட்டம்.


Wednesday, November 4, 2015

டிசம்பர் 1 & 2 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த அறைகூவல்!

நம்முடைய  NFPE  சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2, 2015  இரண்டு நாட்களிலும்  48 மணிநேர   வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக  நடத்திடுவோம். 

வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ் எதிர்வரும் 06.11.2015 அன்று டெல்லி  DAK  BHAWAN  முன்பாக மிகப்பெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்துடன் , இலாக்கா  முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. 

இதேபோல , தமிழகத்தில் CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 06.11.2015 அன்று  ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்பாட்டம் நம்முடைய NFPE  இயக்கத்தின் 9 சங்கங்கள் சார்பாக  தமிழ் மாநில இணைப்புக் குழு மூலம் நடத்தப்பட்டு அதன் முடிவில்  வேலை நிறுத்தத்திற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்திட்டு  CPMG  அவர்களிடம் வழங்கப்படும். இதற்கான  விரிவான சுற்றறிக்கை   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பாக  வெளியிடப்படும்.

எனவே  தமிழகத்தின்  அனைத்துக் கோட்டங்களிலும்  இதேபோல எதிர்வரும்  06.11.2015 அன்று NFPE  இன் அனைத்து  உறுப்பு  சங்கங்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த பகுதி  கோட்ட  அலுவலக/ தலைமை  அஞ்சலக வாயிலில்  கண்டன ஆர்பாட்டம் நடத்தி  கீழே  அளிக்கப் பட்டுள்ள   வேலைநிறுத்த நோட்டீஸ்  நகல் மற்றும் கோரிக்கைகளை  இணைத்து அனைத்து  கோட்ட  கண்காணிப்பாளர்களிடமும்  வழங்கிட முடிவு எடுக்கபட்டுள்ளது வேலை நிறுத்தத்திற்கான  ஆயத்தப் பணிகளை  இன்றே தொடங்கிட வேண்டுகிறோம்.

 வெல்லட்டும் !  வெல்லட்டும்   வேலை நிறுத்தம்  வெல்லட்டும் !



CHARTER OF DEMANDS


(i)        Include GDS in 7th CPC for wage revision and other service related       matters.


(ii)       Implement cadre Restructuring proposals in all cadres including Postal          Accounts      & MMS.


(iii)      Fill up all vacant posts in all cadres of Department of Posts (i.e. PA, SA,          Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA       CO, PA SBCO, Postal Accounts, Civil & Electrical         Wing Staff, as          per actual sanctioned       strength.


(iv)      Stop all types of harassment in the name of implementation of various            new    services and schemes and Trade Union Victimization.

செயலர் !
கடலூர் கோட்டம் AIPEUP3,
@சிதம்பரம் 
608001.


Wednesday, October 7, 2015

CORE SYSTEM INTEGRATOR LAUNCHED! FLASH

The Department of Posts (DoP) and Tata Consultancy Services (TCS) officially kicked-off the Core System Integrator (CSI) Project on 2nd of May 2013, as a part of the IT Modernization Project.

Core Systems Integration (CSI) will integrate all solutions implemented under the IT Modernization Project across different channels, levels and locations.

Now the CSI Project is under testing at selected Post Offices.  By the rolling out of this project, the entire local database based applications like Meghdoot and SpeedNet Software will be replaced with web based application developed by TCS.

Following are some details about new Point Of Sale module under CSI Project.





Overview

1.   Login for each of the module is based on roles
2.   User ID is created centrally and shared with each and every individual separately
3.   Roles and Password are setup at the Identity Access Management (IAM) application
4.   Individual applications use the centrally setup password


Login to POS

1.   POS Counter application allows a person to login provided the person has the allocation to use the counter
2.   Counter allocation happens at the Back Office application of POS
3.   Single Sign On(SSO) allows login to POS Counter, Back office, PBS, PLI, SAP through the CA –SSO

Day Begin

1.   Post Master, Supervisor, Treasurer are the controlling Users
2.   Post Master or the designated person will start the operation
3.   Supervisor will allocate the counter to the operators
4.   Treasurer will receive the Cash, Stamps, IPOs from the F&A
5.   Treasurer will allocate the Cash, Stamps, IPOs to the users
6.   Treasurer / Supervisor will get alerts for approval
7.   Post Master or the designated person will close the Post Office operation during the end of Day


Monday, October 5, 2015

CUSTOMERS OF POST OFFICES CAN AVAIL THEMSELVES OF ANY SERVICE FROM ANY COUNTER VERY SOON

Dear friends,
TCS has developed a software " Core System Integrator" with the assistance of our staff . By this all our postal operations and functions are integrated and Public can avail their facilities in any counter. They need not go to every counter for every services we, the Postal department provided.

This has been  tested for the last six months in Mysore division as a Pilot project and now implemented in Mysore Division with effect from 01.10.2015. This service is connected with the Server in Mumbai.

Importantly, Customers will get delivery status of their posts or parcels on their mobile phones or can track status online. All data will be stored at the Central Server in Mumbai.

This shows that Postal Savings bank functioning shall be separated from  "Post bank of India " ie Payment bank of DOP.

SOURCE:-
1. MYSORE DIVISION

Wednesday, September 2, 2015

நன்றி! நன்றி!! நன்றி!!!

நன்றி! நன்றி!! நன்றி!!!

  இன்று (02.09.2015) நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெருவாரியாகக் கலந்துக்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் போராட்டக்குழுவின் (JCA) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  


ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வே!
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே! 


//NFPE CUDDALORE DIVISION 
607001&608001