கோட்ட /கிளைச் செயலர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் !
கடந்த 27.09.2016 அன்று நடைபெற்ற கோட்ட /கிளைச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கேடர் சீரமைப்பு உத்திரவு அமல்படுத்துதலில் ஊழியர் தரப்பு ஆலோசனைகளை அளித்திட மாநில நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டு கடிதம் அளித்துள்ளோம்.
இதனிடையே ஊழியர் தரப்புடன் பேசியபடியே ஒவ்வொரு கோட்டத்திலும் கூடுமானவரை LSG ,
HSG பதவிகளை APM
(Accounts), Accountant, Treasurer, PRI, CPC , BPC போன்ற நிலைகளிலும் IDENTIFY செய்வதற்கான விபரம் அளிக்க வேண்டி நிர்வாகத்திடமிருந்து கடிதம் ஒவ்வொரு கோட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகலும் உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது. ஏற்கனவே SYSTEM ADMINISTRATOR பதவிகளிலும் விபரம் கோரப்பட்டுள்ளது.
தற்போது நம் மாநிலச் சங்கத்தினால் விரிவான விபரமறிதல் பொருட்டு , ஒரு PROFORMA கீழே அளிக்கப்பட்டுள்ளது. அதனை கோட்ட /கிளைச் செயலர்கள் பூர்த்தி செய்து உடன் மாநிலச் சங்கத்தின் EMAIL முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம். இது உரிய ஆலோசனை மற்றும் மாநில நிர்வாகத்திடம் சரியான முறையில் கோரிக்கை அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும். உங்களின் முழுமையான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment